Tuesday, April 3, 2012
மரணவலி....
என் விழிகளில் வழியும் கண்ணீர்
எனக்காக என்றுமே அழவேண்டாம்
என்று என் இறுதி ஆசை....
என்னவளிடம் கூறினேன்
கூறிய அடுத்த நொடியில்
அவள் கண்கள்
கலங்கியது
அப்பொழுது தான் புரிந்தது...
எனக்காக துடிக்க
இன்னும் இரு கண்கள் இருக்கிறது என்பதை
இருந்தாலும் ஏற்றுக்கொள்ள
என் இதயம் தயங்குகிறது.....
காரணம்
பிரிந்து விடுவோம் என்று
நம் காதல் பிரியாது
என் உயிர் என்னுடலை விட்டு
பிரியும் என்பது என் இதயத்துக்கு
எனக்கு முன்பாகவே தெரியும்
அது துடிக்க நிறுத்தும் போது
நானும் நின்று விடுவேன்.......
Subscribe to:
Comments (Atom)

