Friday, February 24, 2012

பயம்

உன்னை விட்டு 
பிரிந்து போக முடிவு செய்த பிறகு 
நீ சம்பந்தப்பட்ட எதுவுமே 
வேண்டாம் எனக்கு 
ஏன் உன் நினைவுகள் கூட....
எங்கே மீண்டும் உன்னை 
வந்து சேர்ந்து விடுவேனோ என்ற பயம் தான்  
மீண்டும் உனக்கு சிறு தொந்தரவுகூட 
கொடுக்க கூடாது என்பதில் 
உறுதியாய் உள்ளேன் 
                                         ss

வலி

காதலிக்கும் போது தெரியாத வலி  
காத்திருக்கும் போது தெரிந்தது 
நான் அல்ல 
எனக்கவ என்னவள் காத்திருந்த போது 
                         -ஜனாவின் பயணம்- 

நினைவுகள்

உன்னைச் சுற்றி 
இருக்கும் 
நினைவுகள் எல்லாம் 
என்னை உனக்கு 
நினைவுபடுத்திக்
கொண்டு தான் இருக்கும் 
உனக்கு என் நினைவுகள் 
என்னை நினைவு படுத்தினாலும் 
எப்படி உன்னால் 
மட்டும் என்னோடு பேசாமல் 
இருக்க முடிகிறது  
                              ss
                                                      

நீங்கிச் சென்றாலும்




கடற்கரை ஓரம்
எத்தனையோ காதல் ஜோடி
நான் மட்டும் தனியாக
இருந்தாலும்
என்னுடன் நி இருப்பது
போன்ற ஒரு உணர்வு
நாம் இருவரும்
சேர்ந்து திரிந்த இடமல்லவா
நீ என்னைவிட்டு
சென்ற போதும்
உன் நினைவுகள்
எனக்கு உன்னை
நினைவு படுத்திக்கொண்டே இருகிறதே!
என் நினைவுகள்
உனக்கு என்னை
நினைவு படுத்துகின்றனவா?
                       ss   

பரிசு

மீண்டும் தோற்று போனேன் 
உண்மைக்கு கிடைத்த பரிசு அவமானம் 
காதலனை உயிராக நினைத்தவளுக்கு 
அவனை புரிந்து கொள்ள இன்னும் முடியவில்லை 
காரணம் தேடி நானும் அலைந்தேன் 
பிரிந்து பிரிந்து சேர்வதற்க்கு நம் காதல் ஒன்றும் 
பறவையின் சிறகுகள் அல்ல 
ஒரு முறையாவது என்னை புரிந்து கொள்வாய் என்றிருந்தேன் 
நீயோ பிரிந்து செல்வோம் என்று சொல்லிவிட்டாய் 
மீண்டும் சேர்வதற்க்கு நாம் ஒன்றும் காதலர்கள் அல்ல 
காவியம் பாட நீ என் காதலியும் அல்ல 
இது நம் காதலுக்கு சாதகமும் அல்ல 
மீண்டும் வர விரும்பாத ஜனாவின் பயணம் முற்றும் ..........
                                                            -ஜனாவின் பயணம்- 

காதல்



நிம்மதியான வாழ்வை தேடி 
மீண்டும் பயணத்தை தொடங்கிவிட்டேன் 
ஏனோ மீண்டும் என்னை காயபடுத்தி 
அவளும் சேர்ந்து துடித்து போனாள் 
என்னை பலி வாங்க கடவுள்
எடுத்த ஆயுதமோ இந்த காதல் 
மன்றாடி கேட்கிறேன் இதைவிட 
வேறு தண்டனை தா என்று 
காதலில் தோல்வியடையும் அணைத்து
ஆண்களுக்கும் இது சமர்ப்பணம் 
காதலில் மூழ்கி கிடக்கும் அப்பாவி 
ஆண்களுக்கு இது எச்சரிக்கை 
காதலிக்க தொடங்கும் முட்டாள்களுக்கு 
சொல்லும் அழகான யோசனை 
விழுந்தால் எழுவதற்க்கு
இது ஒன்றும் புதை குழி அல்ல
உன்னை முழுமையாக புதைக்கும்
சவக்குழி இந்த காதல் ...
                                -ஜனாவின் பயணம்-
Newer Posts Older Posts